பெரம்பலூர்: இயற்கை வேளாண்மை செய்யும் வட்டார உழவர்களின் பட்டறிவுப் பகிர்தல் நிகழ்ச்சி பெரம்பலூரில் நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தலையாட்டி சித்தர் மடத்தில் இன்று இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்கள் ஒன்று திரண்டு பட்டறிவுப் பகிர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருங்குறுவை, அறுபதாம் குறுவை ஆகிய மரபு வழி விதை நெல்கள் பற்றியும் காய்கறிகள், பழங்கள் குறைந்த செலவில் பயிரிட்டு அதிக லாபம் அடைவது பற்றியும் விவசாயிகள் கலந்து உரையாடினார்கள்.
எளம்பலூர், மேலப்புலியூர், செங்குணம், ஆலத்தூர், சிறுவாச்சூர், அனுக்கூர், தேனூர், அம்மாபாளையம், பேரளி நெடுவாசல்உள்ளிட்ட மாவட்டத்தின் பிற ஊர்களில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு இயற்கை வேளாண்மை இயக்கம் தமிழ்க்காடு என்ற தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.