perambalur.kalaimalar.com
(நாட்கள் கடந்த செய்தி):

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிப்டைந்த பகுதிகளை மக்கள் நல கூட்டணி பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட செயலாளர்கள் மதிமுக செ.துரைராஜ், சிபிஐ வீ.ஞானசேகரன் விசிக ஜெ.தங்கதுரை, தமிநாடு விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை உள்ளிட்டோர் கட்சியினருடன் சென்று பார்வையிட்டனர்.

அப்போது விசுவக்குடி நீர்த்தேக்கத்தை பார்வையிட்ட அவர்கள் தெரிவித்தாவது: ரூ. 36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந் நீர்த்தேக்க திட்ட பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்கம் தொடங்கிய போது மாவட்ட நிர்வாகம் இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சுற்றுப்புற பகுதியில் சுமார் 1000 ஏக்கர் வரை பாசன வசதி அடையும் என்றும், 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர்வள ஆதாரம் பெருக்கும் என்றும் தெரிவித்தது.

அருகிலுள்ள பச்சைமலையில உள்ள இரண்டு மலைகளுக்ககு இடையே உருவாக்கப்படுவதால் அணையின் கொள்ளளவான 41.6 அடி நீர்நிரம்பும் வரை நீர்வரத்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் நீர்த்தேக்கத்தில் 14 அடி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நீர்வரத்து அதிகப்படுத்த அருகாமையில் ஓடக்கூடிய கோரையாற்றின் குறுக்கே உள்ள மலைக்குன்றை உடைத்து நீர்வழிப்பாதையை ஏற்படுத்தி இந்த நீர்த்தேக்கத்திற்கு முழுமையான அளவு நீர்வரத்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீர்வரத்து கிடைத்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் முன்பு தெரிவித்த படி பாசன வசதியும் நீர் ஆதார வசதிகளும் கிடைக்கும் என்றும், மத்திய, மாநில அரசும் வனத்துறையும், மாவட்ட நிர்வாகம் அதற்குரிய நிதி ஒதுக்கி நீர் வரத்து ஏற்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும்.

சுற்றுலா தலம் இல்லாத மாவட்டத்தில், இயற்கை சூழல்களோடு அமைந்துள்ள விசுவக்குடி நீர்த்தேக்கத்தை ஒட்டி அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலாதலம் அமைக்க மக்கள் நல கூட்டணி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு பி.ரமேஷ், சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், விசிக ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், பாஸ்கர், வழக்கறிஞர் ஸ்டாலின், மதிமுக மாவட்ட துணைசெயலாளர் ஜெயசீலன், சிபிஎம் எம்.கருணாநிதி உள்ளிட்டோர் அப்போது அங்கு இருந்தனர்.

(ஆனால், பொதுப்பணித்துறை புதிய அணை என்பதால், வரும் நீரை தேக்காமல் வெளியேற்றி வருகிறது என்பது நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது என்பதை கவனிக்க வில்லை… மேலும் மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவ மழை இன்னும் முறையாக பொழியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!