விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

schedule
2016-01-07 | 16:55h
update
2026-04-22 | 13:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து இன்று நீதிமன்றம் ஜப்தி செய்தது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் சொக்கநாதன் மகன் லட்சுமி நாராயணன் (50). இவர், கடந்த 1.10.2012-ல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தின் படிக்கட்டில் ஏறும்போது நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, இழப்பீடு கோரி பெரம்பலூர் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை 10.9.2014 ஆம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணனுக்கு திருச்சி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாளர் ரூ. 3 லட்சத்து 83 ஆயிரத்து 096 வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Advertisement

இத்தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் செலுத்தாததால், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமா பானு, விபத்தல் பாதிக்கப்பட்ட நபருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 766 வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டார்.

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாளர் நஷ்ட ஈட்டுத் தொகையை செலுத்தாததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த திருச்சி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து இன்று நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு பேருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது .இதனையடுத்து, நஷ்ட ஈட்டுத் தொகை செலுத்தும் வரை அந்தப் பேருந்தை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 13:01:53
Privacy-Data & cookie usage: