மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 27.08.2015 அன்று 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமாக நீர்பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.