பெரம்பலூர் : பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்புக்குரிய தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ.இ மீனாட்சி தலைமையில் நடந்தது.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் எழுந்து 2014-2015ம் ஆண்டு அரவை பருவத்துக்கு பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய சுமார் மூவாயிரம் விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை 32 கோடியே 25 லட்சம் ரூபாயை பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும்.

இணை மின் உற்பத்தி திட்டம், ஆலையை நவீனப்படுத்திடும் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும்இ கரும்பு விவசாயிகளுக்கு மறுக்காமல் வங்கி கடனுதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி கோரிக்கைகள் அடங்கிய மனுவை டி.ஆர்.ஓ.விடம் கொடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த வெளிநடப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் ராமலிங்கம், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மாணிக்கம், திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!