வேப்பந்தட்டை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

schedule
2015-07-01 | 13:58h
update
2026-06-16 | 10:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்திலிருந்து வெண்பாவூர் செல்லும் பிரிவு சாலையில் நிழற்குடை உள்ளது.

இந்த நிழற்குடையில் இன்று அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தாடியுடன் ஊதா கலர் கோடு போட்ட சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

Advertisement

இதனை அந்த வழியாக வந்த பயணிகள் பார்த்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா. உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத விசாரணைக்காக அணுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் எந்த ஊர் என்பது பற்றியும், எப்படி இறந்தார் என்பதை பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 10:20:01
Privacy-Data & cookie usage: