வேப்பந்தட்டை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் படுகாயம்.

schedule
2015-12-04 | 15:22h
update
2026-06-18 | 15:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (27). விவசாயியான இவர் இன்று காலை தனது வீட்டிற்கு மின்சாரம் வராததால் வீட்டிற்கு அருகிலுள்ள மின்கம்பத்தில் ஏறி அறுந்த மின்ஒயரை இணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

Advertisement

உடனடியாக மணிகண்டனை அங்கிருந்த அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 15:35:28
Privacy-Data & cookie usage: