வ.களத்தூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயம்

schedule
2015-08-23 | 17:04h
update
2026-06-16 | 22:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள், விவசாய வேலைக்காக தொண்டபாடி கிராமத்திற்கு 35-பேர் லோடு ஆட்டோ ஒன்றில் சென்றனர். மரவநத்தம் அடுத்துள்ள புதூர் அருகே சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 25 பெண் விவசாய பணியாளர்கள் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வி.களத்தூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 22:53:28
Privacy-Data & cookie usage: