ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் முளைப்பாரி, பால்குட ஊர்வலம்

schedule
2015-06-21 | 17:20h
update
2026-04-03 | 12:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகர் எதிரே ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபத்துக்கு கடந்த 22.6.2014 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Advertisement

இதற்கான வருடாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி, பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்களை எடுத்துக்கொண்டு கடைவீதி, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக ஊர்வலமாக சென்று ஸ்ரீ ஷீரடி சாயிபாபா கோயில் வளாகத்துக்கு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகமும், மகா கணபதி ஹோமமும், முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகா அபிசேகமும், சங்காபிசேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரமும், ஆரத்தியும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.04.2026 - 12:34:24
Privacy-Data & cookie usage: