அண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யாததால் காவல் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு

schedule
2015-08-31 | 17:43h
update
2026-06-17 | 01:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராசு (52)இ இவரது சகோதரர் சின்னண்ணன் (60). இவர்களுக்கு அருகருகே விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தங்கராசு கை.களத்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

Advertisement

இந்நிலையில் இன்று காலை போலீஸ் நிலையம் வந்த தங்கராசு போலீசார் வழக்கு பதியாததை அறிந்தார். இதனால் மனமுடைந்து போலீஸ் நிலையம் முன்பாக தனது கைப்பையில் மறைத்து கொண்டு வந்த பூச்சி மருந்தை எடுத்து திடீரென குடித்தார்.

உடனடியாக அருகிலிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:12:30
Privacy-Data & cookie usage: