அண்ணல் அம்பேத்கர் விருதுக்காக விண்ணப்பிக்கலாம்

schedule
2015-08-11 | 17:04h
update
2026-04-17 | 03:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

Advertisement

அவ்வகையில் 2016-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
WWW.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சென்னைஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 03:19:49
Privacy-Data & cookie usage: