அரசு காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்; 10 பேர் கைது

schedule
2018-07-23 | 15:38h
update
2026-04-18 | 22:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் காப்பக்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என மொத்தம் 10 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது முஷாபர்நகரில் அரசு நிதி உதவியுடன் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்தக் காப்பகத்தில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தணிக்கை செய்தது. அப்போது, இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளை அங்குப் பணியாற்றும் ஊழியர்களே பல நேரங்களில் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும், அதில் சிறுமியை அடித்துக்கொன்று புதைத்துவிட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.இதையடுத்து மும்பையைச் சேர்ந்த அந்த நிறுவனம், மாநில சமூக நீதித்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்து விசாரணையைத் தொடங்கியது.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:26:09
Privacy-Data & cookie usage: