அரசு பேருந்து இயக்கக் கோரி வடக்கு மாதவி கிராம மக்கள் சாலை மறியல் (சென்னையில் மட்டும்தான் அரசு ஸ்மால் பஸ்களை இயக்க வேண்டுமா!)

schedule
2015-07-17 | 12:33h
update
2026-05-21 | 11:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராம மக்கள் போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அரசு பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவர்கள், பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுப்ட்டனர்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நகருக்கு நாள்தோறும் வந்து செல்ல பொதுமக்கள், மாணவர்கள், விவாசயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஆறு மினி பஸ்கள் அனுக்கூர் வரை சென்று வர பர்மிட் இருந்தும் ஒரு ஓரே மினிபஸ் மட்டுமே இயக்குப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மினி பஸ்களும் ஷேர் ஆட்டோக்களின் வரவால் மினிபஸ்கள் பெரும் நட்டத்தை சந்தித்ததால் அவையும் மெல்ல நிறுத்தப்பட்டு வருகின்றன.

ஷேர் ஆட்டோக்கள் இதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு ரூ.10. கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் கடும் சிரமம் அடைவதாகவும்,

பொதுமக்கள் நாள்தோறும் வடக்கு மாதவி பகுதயில் இருந்து பெரம்பலூர் வந்து சொல்ல தோதாக இருக்கும் வகையில் அரசே பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும்,

மேலும், எளம்பலூர், சமத்துவபுரம், காந்தி நகர், பகுதி மட்டும் பயன் பெறாமல் அனுக்கூர் வரை பேருந்துகளை இயக்கினால் பொதுமக்கள் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் எனக் கூறி இன்று காலை சுமார் 9 மணி அளவில் பெரம்பலூர் அனுக்கூர் சாலையில் பொதுமக்கள் திரண்டு சுமார் அரை மணி நேரம் வடக்கு மாதவி கிராமத்தில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் சாலை மறியலில் ஈடுப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.05.2026 - 11:30:19
Privacy-Data & cookie usage: