ஆஃப்ரிக்க நாடுகளை நோக்கி பிரதமர் மோடி 5 நாட்கள் அரசுமுறைப் பயணம்

schedule
2018-07-23 | 14:21h
update
2026-04-18 | 22:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, ஆஃப்ரிக்க நாடுகளை நோக்கி இன்று தமது பயணத்தை தொடங்கவுள்ளார். ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாஃபிரிக்கா உள்ளிட்ட 3 ஆஃப்ரிக்க நாடுகளுக்கு மோடி 5 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் முதற்கட்டமாக ருவாண்டாவிற்கு செல்லவுள்ள அவர், இந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெறவுள்ளார். இதேபோல், உகாண்டாவிற்கு செல்லும் மோடி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற இரண்டாவது பெருமையையும் தன்வசப்படுத் தவுள்ளார். இதைத்தொடர்ந்து, தென்னாஃப்ரிக்கா செல்லவுள்ள அவர், நாளை மறுநாள் முதல் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:33:14
Privacy-Data & cookie usage: