ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

schedule
2015-06-06 | 08:34h
update
2026-05-27 | 19:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

சென்னை : ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். சுலோச்சனா சம்பத் அவர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் சுலோச்சனா சம்பத்தின் உயிர் பிரிந்தது. சுலோச்சனா சம்பத்தின் கணவர் ஈ.வெ.கி. சம்பத் திராவிடர் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாரின் சகோதரர் மகன். சுலோச்சனா சம்பத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சுலோச்சனா சம்பத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வேப்பேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மரணச்செய்தி அறிந்த உடன் உடனடியாக விரைந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கட்சித் தலைவர் பலர் நேரில் சென்று அஞ்சிலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.05.2026 - 19:36:05
Privacy-Data & cookie usage: