எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை மறுநாள் கார்த்திகை தீபத்திருவிழா : எண்ணெய் தானம் வழங்கலாம்!

schedule
2015-11-23 | 09:51h
update
2026-04-18 | 11:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : எளம்பலூர் பிரம்ம ரிஷிமலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 33வது ஆண்டு கார்த்திகை தீபம் இந்தாண்டு சிறப்பாக கொண்டாப்படவுள்ளது.

இதையொட்டி கார்த்திகை தீபத்திருநாளில் மலையின் மேல் 210 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் ஆயிரம் கிலோ நெய்யை கொண்டு மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்கான த்ரி மற்றும் நெய், செம்பு கொப்பறை ஆகியவை சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Advertisement

இப்பொருட்களுடன் கோ பூஜை நேற்று நடந்தது. பின்னர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் கூறுகையில்,

நவ., 25ம் தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு கோபூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், காலை 10 மணிக்கு கஜஊர்வலம் தீப செப்பு கொப்பறை, த்ரி, நெய் ஆகியவை வைக்கப்பட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பேரூர் மடத்து 63 நாயன்மார்கள் சிலைகள், திருவாரூர் சிவனடியார்களுடன் ஸ்ரீசிவராமலிங்கசுவாமி சிவபூதகன வாத்தியங்களுடன் ஊர்வலமாக எளம்பலுõர் பிரம்ரிஷிமலைக்கு கொண்டு வரப்படுப்படுகிறது.

பின்னர் மலையின் மேல் மாலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் ஏற்றப்படும். இதைத்தொடர்ந்து 6.15 மணியளவில் சாதுகளுக்கு வஸ்திரதானமும், பத்தாயிரம் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என்றார்.

விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினிமாதாஜி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் டிரஸ்ட் மெய்யன்பர்கள் சிங்கப்பூர் வக்கீல் ரத்தினவேலு, தொழிலதிபர் ஜெகத்ராம்ஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.

எண்ணெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 11:06:14
Privacy-Data & cookie usage: