கணவன் வீட்டு சொத்து பிரிப்பதில் தகராறு: பெண் தூக்கு போட்டு தற்கொலை

schedule
2015-08-27 | 17:26h
update
2026-04-17 | 05:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது40). இவரது மனைவி மஞ்சுளா ( 35 ). இவர்களுக்கு திருமணம் ஆகி கோபிகா ( 10 ) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது செல்வம் அரபு நாடான துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் செல்வத்திற்கும் அவரது தம்பி முருகனுக்கும் சொந்தமான பூர்வீக சொத்து பூலாம்பாடியில் உள்ளது. இதனைப் பிரிப்பது தொடர்பாக மஞ்சுளாவிற்கும் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் மனமுடைந்த மஞ்சுளா நேற்று மாலை வீட்டில் ஆள் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் பின்னர், வீட்டிற்கு வந்த உறவினர்கள் மின்விசிறியில் மஞ்சுளா பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 05:29:43
Privacy-Data & cookie usage: