காவிரி விவகாரம் 2 நாளில் உறுப்பினர் நியமனம்- குமாரசாமி

schedule
2018-07-04 | 16:56h
update
2026-04-19 | 00:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி விவகாரத்தில் இன்னும் 2 நாட்களில் உறுப்பினரை நியமிக்க உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள் ளார்.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், ஆணையம் அமைக்க கூடாது என்று பிரதமர் மோடியை, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோரையும் சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்பது மாநில அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி விவகாரத்தில் இன்னும் 2 நாட்களில் உறுப்பினரை நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இருப்பதால், சட்டப்படி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தெளிவில்லாத சில விசயங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:49:18
Privacy-Data & cookie usage: