குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேர் கைது

schedule
2015-06-17 | 17:41h
update
2026-03-25 | 12:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேரை மகளிர் போலீஸார் இன்று கைது செய்தனர்.

குன்னம் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ரமேசுக்கும் (32), கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷத்துக்கும் (24), கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தர்மேந்திரா என்ற குழந்தையும் உள்ளது.

Advertisement

இந்நிலையில், கணவன் ரமேஷ், இவரது தாய் தங்காயி (60), சகோதரி மலர்கொடி (40) ஆகியோர் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மனமுடைந்த சந்தோஷம் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஒகளூரை சேர்ந்த சத்யாவை ரமேஷ் திருமணம் செய்துகொண்டாராம். இதையறிந்த சந்தோஷம், வரதட்சிணையாக கொடுத்த வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் நகைகளை திரும்ப கேட்டதற்கு ரமேஷ், தங்காயி, மலர்கொடி, சத்யா ஆகியோர் தகாத வார்க்கைகளால் திட்டி தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சந்தோஷம் அளித்த புகாரின்பேரில், மேற்கண்ட நபர்கள் மீது பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா வழக்குப் பதிந்து, ரமேஷ், தங்காயி, மலர்கொடி ஆகியோரை இன்று கைது செய்து விசாரிக்கிறார்.

மேலும், தலைமறைவாகியுள்ள சத்யாவை மகளிர் போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.03.2026 - 12:26:55
Privacy-Data & cookie usage: