குரும்பலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

schedule
2016-01-09 | 16:34h
update
2026-04-16 | 07:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவரும், நகரச் செயலருமான செல்வராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர் நகரச் செயலர் ராஜபூபதி, பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில், முன்னாள் நகரச்செயலர் புஷ்பராஜ், துணைச்செயலர் ராமைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

குரும்பலூர் கூட்டுறவு வங்கிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை அதிமுக மாவட்டச் செயலரும், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவருமான ஆர்.டி. ராமச்சந்திரன் வழங்கி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:

பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் கொண்டாடும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் ரூ. 100 ரொக்கம் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வங்கித் தலைவர் எஸ். குழந்தைசாமி, கூட்டுறவு சங்க துணைத்தலைவர் செல்லதம்பி, இயக்குநர் ஆர். ஜானகி, மாவட்ட பிரதிநிதி மருதை, முன்னாள் நகரச் செயலர்கள் பழனிமுருகன், வார்டு செயலர்கள் எம். முத்து, தமிழ்செல்வி, அழகேசன், ஏ. ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் சேகர், சீதாராமன், கே. செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 07:37:10
Privacy-Data & cookie usage: