சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு :ஆட்சியர் தகவல்.

schedule
2015-09-07 | 10:51h
update
2026-04-15 | 19:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர் இஸ்லாமியர் புத்த மதத்தினர் சீக்கியர் மற்றும் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-2016-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனடிப்படையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் புதியது (ம) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 25.09.2015க்குள் சமாப்பிக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் 15-10-2015 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 19:59:39
Privacy-Data & cookie usage: