சூப்பர் 30 சிறப்பு வகுப்புகளில் பயின்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் .ப.மதுசூதன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன் விபரம் பின்வருமாறு :

பெரம்பலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிhpயர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக கடந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் மிகவும் முன்னேறி தற்போது வெளியான 12 ஆம் வகுப்பில் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே 2 ஆம் இடம் பெற்றுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை தமிழகத்தின் சிறந்த மருத்துவ கல்லூhp, அண்ணா பல்கலைக்கழக சிறந்த பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மருத்துவம்-30, சிறப்பு பொறியியல்-30, என்ற பெயாpல் 11, 12 ஆம் வகுப்புகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு,

அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக்; கொண்டு சூப்பர் 30; வகுப்புகள் 24.6.2013 முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு,சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர், சு.ஆடுதுறை, பாடாலூர் ஆகிய பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள சூப்பர் 30 வகுப்புகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பாடத்துடன் தன்னம்பிக்கையூட்டும் மனவளப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் 30 வகுப்பில் சென்ற ஆண்டில் (2013 – 14) பயின்ற மாணவன் எஸ்.உதயகுமார் தற்போது சென்னை அரசு மருத்துவகல்லூhயில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றார்.

இந்த ஆண்டு (2015) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சூப்பர் 30 வகுப்பில் பயின்ற 57 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதோடு, 2 பேர் தவிர 55 மாணவ, மாணவியர்களும் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்.

மேலும் 9 மாணவ, மாணவிகள் கணக்கு பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் பெரம்பலூர் சூப்பர் 30 வகுப்பில் பயின்ற மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் லாடபுரத்தை சேர்ந்த பி.பிரகாஷ் (தந்தை பெயர் வே.பிச்சை, தாயார் பெயர் பி.அன்னலட்சுமி) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,140 மதிப்பெண்களும், மருத்துவ கல்லூரி சேர்க்கை தகுதி மதிப்பெண் 196.50-ம் பெற்றும் உள்ளார். இவருக்கு கலந்தாய்வில் சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இரூரைச் சேர்ந்த பா.பிரசாந்த் (தந்தை பெயர் வெ.பாலு, தாயார் பா.சரோஜா) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண்களும், மருத்துவ கல்லூரி சேர்க்கை தகுதி மதிப்பெண் 193.25-ம் பெற்றும் உள்ளார்.

இவருக்கு கலந்தாய்வில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

கொளத்தூரைச் சேர்ந்த த.அரவிந்த்ராஜ் (தந்தை மு.தமிழரசன், தயார் த.கலைச்செல்வி) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,119 மதிப்பெண்களும், மருத்துவ கல்லூரி சேர்க்கை தகுதி மதிப்பெண் 192.25-ம் பெற்றும் உள்ளார்.

இவருக்கு கலந்தாய்வில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் சூப்பர் 30 யில் பயின்ற நாட்டர்மங்கலத்தை சேர்ந்த மா.மஞ்சுளா (தந்தை பி.மாரிமுத்து, தாயார் மா.முத்துலெட்சுமி) மருத்துவ கல்லூரி சேர்க்கை தகுதி மதிப்பெண் 191.75- பெற்று உள்ளார். இவருக்கு கலந்தாய்வில் சென்னை அரசு பல்மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவ கல்லூரியில் பயில வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்கள் இன்று (27.6.2015) மாவட்ட ஆட்சியர் (பொ) ப.மதுசூதன் ரெட்டியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் (பொ) மாணவ, மாணவியர்களை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கியதுடன், தற்போது பெரம்பலூர், பாடாலூர், சு.ஆடுதுறை சூப்பர் 30 பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் உங்களது அனுபவங்களை எடுத்துக்கூறி அடுத்த ஆண்டில் அதிக அளவில் மாணவ, மாணவியர்கள் உயர்கல்விகளில் சேர உற்சாகமூட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தொpவித்தனர்.

இந்த சந்திப்பின்போது சூப்பர் 30 வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன், சூப்பர் 30 சிறப்பு வகுப்புகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!