சென்னையில் கேரளா மியூரல் ஓவியரின் மகாபாரத ஓவிய கண்காட்சி

schedule
2018-07-07 | 20:42h
update
2018-07-07 | 20:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Advertisement

 

சென்னையில் , கேரளாவின் பிரபல ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மாணவிகள் 35 பேர் வரைந்துள்ள மகாபாரத ஓவியகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிகாசமான மகாபாரத கதையினை 113 ஓவியங்கள் மூலம் பிரின்ஸ் மாணவிகள் 35 பேர் படைத்துள்ளனர்.மகளிர் படைத்த மகாபாரதத்தை பகவத் மியூரலாக வழங்கி இருப்பதாக சென்னையில் பிரின்ஸ் தலைமையில் திரண்ட ஓவியர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கேரள மாநிலதலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஓவிய கண்காட்சியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்ததாக தெரிவித்தனர்.சென்னை லலித்கலா அகாடமியில் நடைபெற்று வரும் கண்காட்சியில் ஓவியர் பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையிலான பெண் ஓவியர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த மகாபாரத மியூரல் கண்காட்சி சென்னை லலிதகலா அகாடமியில் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது என்று பிரின்ஸ் தெரிவித்தார். ஆடலரணி கோபிகாவும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.சென்னையில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான ஏற்பாடுகளை திருமதி நிர்மலா செய்துள்ளார்.. இந்ந கண்காட்சி அடுத்து டெல்லி ,மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை ஓவிய கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த ஓவியகண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கண்டு களித்து செல்கின்றனர். சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சியிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:37:51
Privacy-Data & cookie usage: