சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 2 பேர் காயம்.

schedule
2015-07-04 | 18:35h
update
2026-05-03 | 02:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: வேப்பந்தட்டையை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் மூக்கன் (47). இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் பெரியவடகரை சென்று விட்டு வெண்பாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெரியவடகரையை சேர்ந்த பழனிசாமி (52) என்பவர் வெண்பாவூர் வந்து விட்டு பெரியவடகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

Advertisement

இதனிடையே வெள்ளாற்று பாலம் மீது சென்று கொண்டிருந்த போது சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் மூக்கன், பழனிசாமி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2026 - 02:28:26
Privacy-Data & cookie usage: