டிச.11 ம் தேதி மாதந்திர விளையாட்டு போட்டிகள் நடக்கிறது : ஆட்சியர்

schedule
2015-12-08 | 15:23h
update
2026-06-18 | 16:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 11.12.2015 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 11.12.2015 அன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து கையுந்து பந்து ஆகிய விளையாட்டுக்கள் நடைபெற உள்ளது.

Advertisement

தடகளப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனிப் பிhpவுகளில் நடைபெறுகிறது. தடகளப் போட்டிகளின் விவரம் பின்வருமாறு: 100மீ, 200மீ, 800மீ, 3000மீ, ஓட்டப்போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். கூடைப்பந்து, மற்றும் கையுந்து பந்து ஆகிய போட்டிகள் ஆண்களுக்கு மட்டும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட போட்டிகள் வயது வரம்பின்றி அனைவருக்கும் நடைபெற உள்ளது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே, அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், பெரம்பலூர் செல்.9443376054 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 16:45:42
Privacy-Data & cookie usage: