தமிழக ஆளுநரிடம் ஸ்டாலின் பரபரப்பு புகார்

schedule
2018-07-23 | 13:14h
update
2018-07-23 | 13:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும், அது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்துவதில் பெரும் ஊழல் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வழிவகை செய்யுமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார். வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அது குறித்தும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 03:32:30
Privacy-Data & cookie usage: