Newborn baby

அரசு தலைமை மருத்துவ மனைக்கு நிகராக காரை முதன்மை சுகாதார நிலையத்தில் மருத்துவக்குழுவினர் பிரசவம் பார்க்கின்றனர். 10 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளதது – வட்டார மருத்துவ அலுவலர் தகவல்

இது குறித்து வட்டார மருத்துவர் மகாலட்சுமி தெரிவித்துள்ளதாவது;

தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு துணை சுகாதார நிலையங்களை அமைத்துள்ளது. கிராம செவிலியர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட துணைசுகாதார நிலையத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தல், தேவைப்படின் மேல் சிகிச்சைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தல், ஆரம்ப நிலை சிகிச்சை அளித்தல், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தல், பிரவசம் பார்த்தல், கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ச்சி மற்றும் நிலை குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்தல் ஆகிய பணிகளும், செவிலியர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் கர்ப்பமுற்றதை பதிவு செய்தல், தடுப்பு+சிகள் போடுதல் ஆகிய பணிகளும், மகப்பேறு நிதிஉதவி வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், அம்மாபளையம் -பூலாம்பாடி-காரை-கொளக்காநத்தம்-லப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் 30 படுக்கைகள் கொண்ட மே;படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், வட்டார மருத்துவமனைகளும் அடங்கும்.

மற்ற மாவட்டங்களைக்காட்டிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்யும் வகையிலும், குழந்தையின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலுமான ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பினித்தாய்மார்களை கிராம சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து கண்காணித்து அவர;களுக்குத் தேவையான சத்துணவுகளுக்கான அறிவுரைகளை வழங்குவதோடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தகிறார;கள்.

சிக்கலான பிரசவ நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களை பிரசவ தேதி குறிக்கப்பட்ட ஒருவார காலத்திற்கு முன்பாகவே சம்மந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வந்து மருத்துவர;களின் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்படுகிறார்கள். பிரசவ காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் தாய்மார்கள் மேல்சிகிச்சைக்காக அரசு தலைமைமருத்துவ மனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். கர்ப்பினித்தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலைய வாகனத்தின் மூலம் பிரசவத்திற்கு அழைத்து வரப்பட்டு, பிரசவித்திற்கு பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.

காரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வரும் சிகிச்சை முறை பற்றி வட்டார மருத்துவ அலுவலர் மகாலெட்சுமி தெரிவித்துள்ளதாவது:

அதிலும் குறிப்பாக ஆலத்தூர் வட்டாரம் காரை முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடப்பாண்டில் 10 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவப்பணியில் ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு மயக்குநர், ஒரு குழந்தை மருத்துவரைக் கொண்டு குழுவாக மாவட்ட தலைமை மருத்துவ மனையில் நடைபெறுவது போல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து விதமான முதலுதவியுடன் நடைபெற்று வருகிறது.

காரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த சோகை கண்டறிப்பட்ட 68 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரத்த சேமிப்பின் மூலம் இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் சிக்கலான பிரசவம் உள்ளவர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவரையும் உடன் ஒரு நபரையும் ஒரு வாரம் தங்க வைத்து உணவு மற்றும் மருத்துவ சேவை வழங்கி அனுப்பப்படுகிறது.

பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் மாவட்ட தலைமை மருத்துவ மனைக்குழுவைக் கொண்டு இந்த ஆண்டு 58 நபர்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. டாக்டர். முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்ட சிற்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் தகுதி உள்ள தாய்மார்கள் அனைவரும் பயன் பெற்று வருகின்றனர். சிக்கலான தாய்மார்களுக்கென தனி முகாம் நடத்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவ மனையிலிருந்து மகப்பேறு மருத்துவரை வரவழைத்து சிறப்பு ஆலோசனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த ஆட்படுத்துனர் மூலம் இவ்வட்டாரத்தில் உள்ள கர்ப்பணிகள் மற்றும் அவர்களின் கணவர் மற்றும் பொது மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு, மார்பக புற்று நோய், கர்ப்ப்பை வாய் புற்று நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை முறையாகப்பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு காரை வட்டார மருத்துவ அலுலவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!