தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் 5 பவுன் செயின் பறிப்பு

schedule
2015-07-15 | 15:44h
update
2026-05-01 | 02:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

வாலிகண்டபுரம் அருகே இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள வி.ஆர்.எஸ்.எஸ்.,புரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்,52, இவரது மனைவி சீதாலட்சுமி,42, இவர்கள் இருவரும் இக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரை காட்டுக்கொட்டகையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சீதாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சீதாலட்சுமி கூச்சலிட்டார்.

Advertisement

சீதாலட்சுமியின் கூச்சல் கேட்டு எழுந்த கனகராஜ் இதை தடுக்க முயன்றபோது மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த கனகராஜ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

*மற்றொரு சம்பவம்: இதே பகுதியை சேர்ந்தவர் வரதராஜ்,40, இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சிவராணி,33, என்பவருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பிரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கவரிங் செயின், ஏ.டி.எம்., ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இவ்விரு சம்பவங்கள் குறித்த கனகராஜ், வரதராஜ் கொடுத்த புகாரின்பேரில் மங்கலமேடு இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமரன் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இதே கிராமத்தை சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணிடம் இதேபோல் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 02:51:34
Privacy-Data & cookie usage: