பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி

schedule
2015-11-27 | 16:26h
update
2026-06-18 | 12:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஆய்வு அலுவலர்களால் கடந்த ஐந்து நாட்கள் முன்னோடி பயிற்சி மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி துவக்கி வைத்தார்

இந்த பயிற்சியில் பொது மக்களிடம் அலுவலர்களின் அனுகுமுறை, அலுவலக நடைமுறைகள், பதிவேடுகள் பராமரித்தல், அலுவலக குறிப்பு மற்றும் கடித வரைவு, ஒழுங்கு நடவடிக்கைகள், பணி நடைமுறை, ஓய்வூதியம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்ட்டது.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசு துணைச் செயலர் சுந்தரராஜன், திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் அபிராமி, மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 12:25:50
Privacy-Data & cookie usage: