பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது எப்போது- நரிக்குறவர் கூட்டமைப்பு ஆவேசம்

schedule
2018-07-23 | 16:08h
update
2018-07-23 | 21:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தங்களை பழங்குடியின் பட்டியலில் சேர்ப்பது எப்போது என தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் நிறுவன தலைவர் காரை.சுப்பிரமணியன் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நரிக்குறவர் எனப்படும் குருவிக்காரன் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரி கடந்த 52 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிஅமைச்சரவையில் தங்களது மக்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் , அதனை இன்றுவரை சட்டவடிவமாக்காதது ஏன் என்றும் அவர் வினா எழுப்பினார். நரிக்குறவர் சமூக மக்களை மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

தங்களது குழந்தைகளும் கல்வி அறிவு பெற்று அரசின் எந்த பணிகளிலும் இன்றுவரை அமரவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டனார். பல்வேறு இளைஞர்களை தாம் படிக்கவைத்தும் கூட அவர்களுக்கு இன்றுவரை அரசு பணி கிடைக்காததால் அவர்களை விரக்தியில ஆழ்ந்து விட்டதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்.

எனவே வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலாவது தங்களை பழங்குடியின பட்டியிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

தங்களது சமூகத்தினர் மிக நேர்மையாக நடந்துகொள்வதால்தான் இப்படி அரசுகளால ஒதுக்கப்படுகிறோமோ என எண்ணத்தோணுவதகாவும் யாரோ சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த நரிக்குறவர்களையும் பொறுப்பு ஏற்க செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ஊடகங்கள் நரிக்குறவர் கைது என செய்திகள் வெளியிடுவதை தவிர்த்து குற்றம் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் திரைப்படங்களிலும் தங்களது சமூகத்தவரை சில இயக்குனர்கள் கடுமையாக விமர்சனம் செய்து படங்களை எடுப்பது தங்களுக்கு பெரும் வருத்தஅத்தை அளிப்பதாகவும் இது போன்ற தங்களது சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு தங்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுத்தர ஊடக நண்பர்கள் திரையுலகினர் படுபடவேண்டும் என்றும் காரை.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:46:42
Privacy-Data & cookie usage: