பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி

schedule
2015-07-08 | 18:30h
update
2026-05-04 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் நடேசன் மனைவி தனலட்சுமி என்பவர் கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ந் தேதி ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை காந்திபுரம் பகுதிக்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி
சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தனலட்சுமியின் இடது கால் முறிவு ஏற்பட்டு அகற்றப்பட்டது. மேலும் செயற்கை கால் பொருத்தபட்டது.

Advertisement

இதனால் அவர் இழப்பீடு கோரி அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விபத்திற்கு காரணமான சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தனலட்சுமிக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் இழப்பீடு தொகையை அரசுப்போக்குவரத்து கழகம் தனலட்சுமிக்கு வழங்கவில்லை.

இதனைத்தொடர்ந்து சக்திவேல் கடந்த 2012 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுமீதான விசாரணை இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட சக்திவேலுவுக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து 5 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்திட நீதிபதி டி.எஸ்., நந்தகுமார் சம்மந்தப்பட்ட டெப்போவிற்கு சொந்தமான அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கலில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப்பேருந்தை கோர்ட் ஊழியர்கள் இன்று ஜப்தி செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2026 - 15:48:45
Privacy-Data & cookie usage: