பாம்பு கடிப்பட்ட விவசாயி மரணம்

schedule
2015-07-15 | 19:33h
update
2026-06-14 | 17:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

வேப்பந்தட்டை அருகே பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் பழனிவேல்(35). இவர் நேற்று அவரது வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பாம்பு
தீண்டியது. இதில் மயங்கினார்.

Advertisement

அவரது குடும்பத்தினர் பழனிவேலை
சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

போதுமான விஷமுறிவு மருந்துகள் இல்லாததால் திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு போதுமான விசமுறிவு மருந்துகள் மருத்துவமனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:52:52
Privacy-Data & cookie usage: