பிளாஸ்டிக் கழிவுகளை கூழாக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது துவக்கி வைத்தார்.

schedule
2015-10-30 | 15:06h
update
2026-04-15 | 21:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் அருகே நெடுவாசல் சாலையில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு பின்புறம் பெரம்பலூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கூழாக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது இன்று துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2014-2015 ஆம் ஆண்டு திட்டத்தின் மூலம் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு மற்றும் இதர பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளில் கிடைக்ககூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பிளாஸ்டிக் கூல் தயாரிக்கும் பணிக்கு ரூ.15.00 இலட்சத்தில் குப்பைளை பிரித்தெடுக்கும் கட்டிடம் மற்றும் குப்பைகளை கூலாக்கும் இயந்திரம் நெடுவாசல் சாலையில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இயந்திரத்தின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் கூழ் செய்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை பணிகளில் தாருடன் சேர்ந்து சாலை அமைக்கவும், மீதமுள்ள பிளாஸ்டிக் கூல் வெளி சந்தையில் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு இருப்பில் வைத்துக்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் இரமேஷ், நகர்மன்ற ஆணையாளர் முரளி, நகர்மன்ற பொறியாளர் ராதா, சுகாதார ஆய்வாளர்கள் கணேஷ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 21:43:45
Privacy-Data & cookie usage: