பெரம்பலுார் அருகே வாலிபர் சாவில் மர்மம்!

schedule
2016-01-10 | 12:06h
update
2026-04-19 | 14:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலுார் அருகே வாலிபர் சாவில் மர்மம் உள்ளதால் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலுார் ஆலம்பாடி ரோடு பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் கோபி (வயது29), இவர் நேற்று மாலை எசனை கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை பெரம்பலுார் அருகே உள்ள கோனேரிப்பாளையம் புறவழிச்சாலையில் ராஜேந்திரன் என்பவரது வயலுக்கு எதிரே முகம், கழுத்து உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து பெரம்பலுார் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிந்து இது குறித்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 14:41:25
Privacy-Data & cookie usage: