பெரம்பலுார் அருகே வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி

schedule
2015-10-03 | 12:49h
update
2026-03-21 | 18:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் நான்கு பேர் பலியாகினர்.

பெரம்பலுார் அருகே உள்ள நுாத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் பெரியசாமி (29) இவர் நேற்று இரவு 10 மணியளவில் துறைமங்கலம் கிராமத்தை சேர்ந்த போஸ் மனைவி அஸ்வினி,19, என்பவருடன் ஒரு இரு சக்கர வாகனத்தில் பெரம்பலுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இரு சக்கர வாகனம் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சங்கர் (32) என்பவரின் இரு சக்கர வாகனமும் பெரியசாமியின் வந்த .ரு சக்கர வாகனமும்; நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் பெரியசாமி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சங்கர் பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியி்ல் இறந்தார்.

Advertisement

மேலும் சங்கர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த ராமர் (52) பெரியசாமி ஆகிய இருவரும் படுகாயமடைந்து பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றொரு விபத்து

*விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் அருகே உள்ள எலவனரசூர்கோட்டை கிராமத்தை சேர்ந்த 19ம் பேர் திருநெல்வேலியில் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக ஒரு வேனில் சென்றுக்கொண்டிருந்தனர்.

வேனை எலவனாசூர்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார்,26 என்பவர் ஓட்டினதார். வேன் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பெரம்பலுார் அருகே உள்ள தேவையூர் பிரிவு ரோடு அருகே வந்தபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எலவனாசூர்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் மகன் மாரியப்பன்,48, என்பவர் படுகாயமடைந்து பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இன்னும் மற்றொரு விபத்து

பெரம்பலுார் அருகே உள்ள வி.களத்துார் பிரிவு ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்தார். இந்த மூன்று விபத்துக்கள் குறித்து மங்கலமேடு இன்ஸ்பெக்டர் ஜெஸ்சிட்மேனுவேல் வழக்கு பதி்ந்து விசாரிக்கிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.03.2026 - 18:51:03
Privacy-Data & cookie usage: