பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி

schedule
2016-05-04 | 09:21h
update
2026-05-26 | 13:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மையத்தின் இயக்குனர் பார்த்த சாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் 2016 ஆம்வருடம் மே மாதம் 9 ஆம் தேதி முதல் வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு உண்டான தகுதி, வயது 18க்கு மேல் மற்றும் 40க்கு குறைவாக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ்
உள்ளவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், அயர்ன் பாக்ஸ், இண்டக்ஷன் ஸ்டவ், சிங்கிள் ஃபேஸ் மோட்டார் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் பழுது
நீக்க கற்று கொடுக்கப்படும். இந்த பயிற்சியில் செய்முறை விளக்கங்கள் அதிகமாக கொடுக்கப்படும்.

Advertisement

இந்தப் பயிற்சி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். பயிற்சி நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில்
மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ்
அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி(IOB) வங்கியின் முதல் மாடியில் உள்ள, கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு , 1 ஸ்டாம்ப் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து மே மாதம் 9ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வரும் 9 ந் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஐஓபி (IOB) கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், முதல்மாடி, மதனகோபாலபுரம், பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328 277896 தொலைப்பேசி மூலமாகவோ தொடர்புக் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 13:19:31
Privacy-Data & cookie usage: