20150928_091113
பெரம்பலூர்: பெரம்பலூரில் அனல் காற்றில் தவித்த மக்களுக்கு நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்து பூமியை குளிரச் செய்தது. நேற்றிரவு 9 மணி அளவில் மேல்திசை காற்று அதிவேகத்துடன் வீசத் துவங்கியது. திறந்த வெளி அரங்கில் ஆங்கிலப்படம் பார்ப்பது, கேட்பது போன்ற அதிரடியாக இடி முழங்கியது, மின்னல் தன் ஒளியால் வானில் வெட்டியது. ஒன்கால் மணிநேரம்

குழந்தைகள் பயந்து தாயை பற்றி கொண்டார்கள்.

தொடர்ந்து பெய்த கனமழையுடன் இடி முழங்கிய சத்தத்தை கேட்ட குழந்தைகள் தங்கள் தாயைப் பற்றிக் கொண்டனர். சில குழந்தைகள் அழவும் செய்தன. தொடர்ந்து மின்னல்கள் வீசிக் கொண்டே இருந்தன.

சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

கனமழை பெய்த போது காற்றும் அதிவேகத்துடன் சுற்றி சுற்றி வீசத் துவங்கியது. மழையும் காற்றும், சேர்ந்து வீசியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாலையை மறைக்கும் அளவிற்கு மழை பெய்தது. இதனால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள், மாநில நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டு மழை பொழிவது குறைந்த பின்னரே தங்கள் வாகனங்களை கிளப்பி சென்றனர்.

குட்டைகள் நிரம்பின. உழவர்கள் மகிழச்சி

ஆடிப்பட்டத்தில் பயிரிட்டிருந்த வேளாண் மக்கள் பருத்தி, மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட மானவாரி சாகுபடிப் பயிர்களை செய்திருந்தவர்கள் மழை பெய்யாததால் பயிர்கள் காய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். நேற்றிரவு பெய்த மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வயல் வெளிகள் மற்றும் சிறு குளங்கள் மழை நீரால் நிரம்பியது.

இடியுடன் மின்னல் தாக்கியதில் இறந்தது எருமைமாடு!

நேற்றிரவு பெய்த மழையின் பெரும் சத்தத்துடன் இடி மின்னல்களால் பூமியே அதிர்ந்தது. அதில் பெரம்பலூர் அருகே உள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான எருமைமாடு மீது மின்னல் தாக்கியதில் எருமைமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து. இன்னும் பல இடங்களில் மரம் மற்றும் மலைகளின் மீது இடி தாக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்:

பெரம்பலூர் 80மி.மீ, வேப்பந்தட்டை 29 மி.மீ, தழுதாழை 22மி.மீ, செட்டிக்குளம் 130 மி.மீ, பாடாலூர் 44 மி.மீ என மழை பதிவாகி இருந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!