பெரம்பலூரில் பைக் திருடிய வாலிபர்கள் கைது : 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

schedule
2017-11-22 | 17:52h
update
2026-06-26 | 15:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

men arrested for stealing a bike near in perambalur Area: 9 motorcycles seized

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் காணமல் போனது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் , பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வெள்ளிங்குடிபட்டியை சேர்ந்த சரவணன் (வயது 24), மற்றும் மணப்பாறை அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ் (வயது 30), ஆகிய இருவரும் மோட்டர்சைக்கிள்களை திருடி விற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த பெரம்பலூர் போலீசார் அவர்கள் திருடி சென்று விற்பனை செய்த பிரபல பைக் கம்பனிகளின் 9 பைக்குகளை மீட்டனர். பின்னர், போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 15:31:49
Privacy-Data & cookie usage: