பெரம்பலூரில் 100 , 50, 20  ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் வணிகர்கள் அவதி!

schedule
2020-01-19 | 01:03h
update
2026-06-18 | 00:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rs.100, 50, 20 by the shortage of banknotes, suffer merchants in Perambalur

பெரம்பலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்றது. குறிப்பாக சில்லரை வணிகமாக டீக்கடை, பெட்டிக்கடை, பீடா ஸ்டால், தெருவோர வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பால் விற்பனையாளர்கள், பழங்கள் வியாபாரிகள், பூ வியாபாரிகள், மளிகைக் கடை போன்றவற்றில், பொதுமக்கள் 100ம் அதற்கு குறைவாத்தான் அதிகளவில் வியாபாரம் செய்வார்கள். பொதுமக்கள் பெரும்பாலும் ஏ.டிஎம்.-மில் ரூ.2000, மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவதால் அவற்றை கொண்டு மக்கள் வியாபாரிகளிடம் வாங்கிய பொருளுக்கு பணம் போக மீது சில்லரை கொடுக்க முடியாமல் அவதிப்பபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில சிறு கடைகளில் பொருட்களை பெறுவதற்கு முன் கடையில் மீத சில்லறை உள்ளதா என உறுதிபடுத்திக் கொண்ட பிறகே ஆர்டகள் கொடுக்க வேண்டும் என அறிவிப்பும் வைத்துள்ளனர். வியாபாரிகளோடு பொதுமக்களும் ரூ.2 ஆயிரம், ரூ. 500 நோட்டுகளை வைத்துக் கொண்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, வங்கி அதிகாரிகள் உரிய சில்லரை மாற்ற தேவையான பணங்களான ரூ. 100, ரூ. 50, ரூ. 20, மற்றும் 10 , 5 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:35:32
Privacy-Data & cookie usage: