பெரம்பலூர் அருகே அட்டூழியம்!. கத்தியை காட்டி காரில் வந்தவர் கடத்தல், நகை பணத்தை அபகரித்து சென்றது கொள்ளை கும்பல்!

schedule
2015-09-19 | 03:44h
update
2026-05-01 | 00:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூரை சிறுவாச்சூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). அவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கேண்டீன் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு பெரம்பலூர் வந்த அவர் , 11 மணி அளவில் வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.

துறைமங்கலம் 3ரோடு பகுதியில் கார் சென்று கொண்டிரந்த போது காரை மற்றொரு காரால் வழி மறித்த மர்ம 4 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி காருடன் செல்வராஜை கடத்தினர். காரை கொள்ளையர்களுள் ஒருவன் ஓட்டினான். மற்ற இரு கொள்ளையர்களும், கத்தியை காட்டி மிரட்டியதுடன் 10 லட்சம் பணமும் கேட்டனர், கத்தியால் 6 வெட்டுக்களை வெட்டினர்.

Advertisement

அவரிடம் இருந்த பணம் மற்றும் 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு செல்வராஜை தாக்கி, அவரை சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர் பாளையம் காட்டுப்பகுதியில் அவரை கீழே தள்ளி விட்டு அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர். அவ்வழியே வந்த நடந்தும் லாரிக்காரர்கள் உதவியுடன் வந்த செல்வராஸ், இன்று அதிகாலை 4 மணி அளவில், சிறுவாச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் பெரம்பலூர் போலீசார், வழக்குப்பதிந்து தப்பி சென்றன கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

துறைமங்கலம் பகுதியில் உள்ள கன்கானிப்பு கேமரா பழுதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நகரின் பல கேமராக்கள் பழுதடைந்த நிலையில்தான் உள்ளன. கடந்த சில தினஙகளுக்கு முன்பு புதுநடுவலூரில் உள்ள தம்பி வீட்டில் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்கள் இவரை சுற்றி உள்ளவர்களோ அல்லது அவருக்கு நன்கு அறிமுகமானவர்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 00:43:37
Privacy-Data & cookie usage: