பெரம்பலூர் அருகே ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

schedule
2016-12-01 | 21:00h
update
2026-06-27 | 18:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3 killed in two separate accidents that occurred near in Perambalur miserable


பெரம்பலூர் அருகே டூவீலர் மீது பள்ளி வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் பள்ளி வேனை அடித்து நொறுக்கி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்,

பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் ஒன்று பெரம்பலூரிலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் சத்திரமனைக்கும் புதுவேலுருக்கும் இடையே சென்ற போது எதிரே வந்த டூவீலரும் பள்ளி வேனும் மீது மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த அதே பகுதியிலுள்ள பொம்னாப்பாடி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜூ மகன் செல்வம் (40) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையறிந்த செல்வத்தின் உறவினர்கள், அப்பகுதி பொது மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு விபத்துக்கு காரணமான பள்ளி வேனை சிறை பிடித்து அடித்து நொறுக்கி பள்ளி நிர்வாகி சம்பவ இடத்திற்கு வரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பாக உறுதியளித்து போராட்டத்தை கைவிட செய்தனர்.

மேலும், விபத்துக்கு காரணமான பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் செல்வராஜை (62) கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டிரைவர் செல்வராஜ் மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, வேப்பந்தட்டை அருகே மோட்டார்சைக்கிள் மீது கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் மோதியதில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் அல்லிகொண்டாம்பட்டியை சேர்ந்தவர்கள் யாக்கோப் (வயது38), ஜெயராஜ்(48). இருவரும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி அருகே உள்ள கொட்டாரக்குன்று பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் வேலைசெய்து வந்தனர். இந்நிலையில் இரவு கொட்டாரக்குன்றில் இருந்து தனது சொந்த ஊரான அல்லிகொண்டாம்பட்டிக்கு ஒரு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.

இவர்கள் பெரியம்மாபாளையம் பிரிவு சாலையில் வந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் நுழையும்போது அந்த பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிராக்டர் பெட்டியில் டூ வீலரில் சென்ற இருவரும் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் தெரிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நட்த்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 18:23:47
Privacy-Data & cookie usage: