perambalur_collectorateபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் எதிர் வரும் அறுவடைபப் பருவத்தில் மக்காச்சோளம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சென்ற ஆண்டு பெரம்பலூர; மாவட்ட விவசாயிகள் தாங்கள் பயிர; செய்த பருத்தி பஞ்சு மகசூலை பெரம்பலூர; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலையும் அதன் மூலம் கூடுதல் வருமானமும் பெற்றனர். அதே போல நடப்பு ஆண்டு பருத்தி மற்றும் மக்காச்சோள விற்பனை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மக்காச்சோளம்; 51,500 எகட்ரிலும் பருத்தி 20,300 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்;ளது. தற்பொழுது பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி 2016 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்பொழுது விவசாயிகள் தங்களது விளைபொருளை பெரம்பலூர; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.

உள்ளுரில் தனியாரிடம் விற்பனை செய்யும் போது எடையில் ஏற்படும் குளறுபடிகளை தவிரக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விற்பனை செய்யும்போது சரியான எடையும் போட்டி மூலம் அதிக விலையும் பெற முடியும்.

மக்காச்சோளத்தை மூட்டைகளாக பிடிக்கும் போது 100 கிலோ கொண்ட மூட்டைகளாக பிடிக்காமல் அதே பெரிய சாக்கு பைகளில் 40கிலோ அல்லது 50கிலோ கொண்ட சிறிய மூட்டைகளாக பிடிக்கவேண்டும் அவற்றை வண்டியில் பாரம் ஏற்றவும், துhக்கி இறக்கவும் எளிதாக இருக்கும்.

இதற்கு அதிக விலையுள்ள புதிய கோணிப்பைகளை பயன்படுத்த வேண்டியதில்லை. மாறாக நல்ல நிலையில் உள்ள விலை குறைவான பழைய கோணிசாக்குகள், கழுவி சுத்தம் செய்ய்ப்பட்ட உர சாக்குகள் மற்றும் சிமெண்ட் சாக்குகள்; ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பெரம்பலூர், ஆத்தூர், துறையூர், அரியலூர், திருச்சி போன்ற பகுதிகளில் உள்ள சாக்கு வியாபாரிகளிடமிருந்து ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தப்பட்ட கோணிசாக்குகள், சிமெண்ட் சாக்குகள் மற்றும் உர சாக்குகளை இப்போதிருந்தே கொள்முதல் செய்து இருப்புவைத்திட விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எனவே எதிர்வரும் அறுவடை பருவத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி மகசூலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து பயன் பெறவேண்டும், என இவ்வாறு அதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!