பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திமுக சார்பில் நாளை, நாளை மறுநாள் நடக்கிறது.

schedule
2015-11-11 | 17:47h
update
2026-04-21 | 12:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

சேவைச் செய்திகள்:

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட திமுக தேர்தல் பணிப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் நடக்கிறது. இதில், கட்சியின் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராஜா, அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

Advertisement

நாளை காலை நவ.12 தேதி வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பாக காந்தி திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவிலும், மாலை 3 மணி அளவில் பெரம்பலூர் நகர திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் சார்பில் மாலை அளவிலும், பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் மாலை 4 மணி அளவிலும், நாளை மறுநாள் நவ.13ம் தேதி காலை 10 மணியளவில் எம்.எஸ்.டி., திருமண மண்டபத்திலும், மாலை 4 மணி அளவில் ஆலத்தூர் ஒன்றியம் சார்பாக பாடாலூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 12:52:01
Privacy-Data & cookie usage: