பெரம்பலூர் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருட்டு : தள்ளுவண்டி வியாபாரிகள் போலீசில் புகார்

schedule
2015-08-14 | 08:32h
update
2026-03-20 | 21:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மார்க்கட் அருகே நிறுத்தபடும் தள்ளுவண்டிகளில் பழங்கள் திருடு போவதாக தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் (போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூராக, சாலையை அடைத்துக் கொண்டு) தள்ளு வண்டிகள் மற்றும் தரைக்கடைகள் வைத்து ஏராளமானோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

Advertisement

வழக்கம் போல் இரவில் தள்ளு வண்டிகளை தார்பாயால் மூடி வைத்து விட்டு சென்றுவிடுவார்கள். இன்று, காலை வந்து, பார்த்தபோது தார்பாய்கள் கிழிக்கப்பட்டு பழங்கள் மற்றும் வண்டியில் இருந்த பொருட்கள் அதில் இருந்த பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த தள்ளு வண்டி வியாபாரிகள் ஒன்று திரண்டு பழ வண்டி வியாபாரிகள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று பழங்களை திருடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.03.2026 - 21:49:22
Privacy-Data & cookie usage: