perambalur-collector-gdpபெரம்பலூர்: திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவா; டாக்டா;. தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 408 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரிடையாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் கிராமப்புறங்களில் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் கிராம விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சு.ஆடுதுறையில் கிராம விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மையத்தில் கையுந்து பந்து மைதானம் அமைக்கப்பட்டு மாணவர்கள் நல்ல முறையில் பயன்பெற்று வருகிறார்கள். இந்த மாணவர்களுக்குத் தேவையான ரூ.1லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ள சீருடைகள் ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் ஜீவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி ஒன்றியங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம அளவிலான விளையாட்டு கட்டமைப்பு வசதிகளுக்காக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றித்தில் சிறுவாச்சூர், செங்குணம் கிராமங்களும்,

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றித்தில் எறையூர் – தொண்டமாந்துறை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாரணமங்கலம் ஆகிய கிராமங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பின்னர், ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2014 -2015 ஆம் கல்வி ஆண்டில் அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவ, மாணவிகள் 19 நபர்களுக்கு ரூ.53,000 மதிப்பிலும்,

மீன் வளத்துறையின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப்பெற்ற மீனவர்களின் பிள்ளைகளான 3 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12,000 மதிப்பிலான பரிசுத்தொகையினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஆகமொத்தம் இன்றைய நிகழ்வில் ரூ.5.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில் கடந்த 8.12.2015 முதல் 10.12.2015 வரை கோயம்புத்தூரில் நடந்த தடகளப்போட்டிகளில் வௌ;ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகளான நாகப்பிரியா, கீதா மற்றும் பல விளையாட்டுகளில் பங்குபெற்ற வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
இந்நிகழ்வில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!