பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 5 காலி பணியிடங்கள்

schedule
2016-12-16 | 14:34h
update
2026-06-24 | 09:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

5 vacant posts in the Perambalur Session District Court

முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.நஸிமாபானு விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் காலியாக உள்ள ஒளி நகல் பெருக்குநர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி ஆகிய 5 பணியிடங்களுக்கு தேர்வு செய்யும்பொருட்டு நேர்முகத் தேர்வு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி, ஒளி நகல் பெருக்குநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடர் (பெண்கள்) – ஆதரவற்ற விதவை – முன்னுரிமைப் பெற்றவர்களும் மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் முன்னுரிமையற்றவர்களும், இரவு காவலர் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் – முன்னுரிமையற்றவர்களும் மற்றும் மசால்ஜி பணிக்கு பொதுப்பிரிவு (பொது) முன்னுரிமையற்றவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் – முன்னுரிமையற்றவர்களும் விண்ணப்பிப்பதுடன் அனைத்து பிரிவினரும் (ஆண், பெண்) 18 வயது முதல் 32 – 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.

Advertisement

ஒளி நகல் பெருக்குநர் பணிக்கு கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழில் நுட்பத் தகுதியும், இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி பணிக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

அனைத்து விவரங்களும் http://ecourts.gov.in/tn/perambalur நீதிமன்ற இணையதள முகவரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது பணி செய்யும் விவரங்களுடனும், அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ்கள் மற்றும் முன்னுhpமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோh;, ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத்திருமணம் மற்றும் பிற சான்றிதழ்கள்) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சுயசான்றொப்பத்துடன்) மற்றும் பிற சான்றிதழ்களிலும் சுயசான்றொப்பம் இட்டு முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு வரும் 05.01.2017 தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.

மேலும், விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மற்றும் தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு போன்ற தகவல்கள் http://ecourts.gov.in/tn/perambalur என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்துகொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களை இணைக்காமல், சான்றுகளின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், என அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 09:59:35
Privacy-Data & cookie usage: