பெரம்ப மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப்-2 க்கான தேர்வு 18 மையங்களில் நடைபெற்றது : மாவட்ட ஆட்சியர் தகவல்.

schedule
2015-07-26 | 11:49h
update
2026-04-30 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தொகுப்பு 2 (குரூப்-2) க்கான தேர்வு இன்று (26.07.2015) காலை 10.00 மணிக்கு துவங்கியது.

பெரம்பலூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக்கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மீனாட்சி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தொகுப்பு 2 (குரூப்-2)க்கான தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 மையங்கள் தெரிவுச் செய்யப்பட்டு, அதில் தேர்வு எழுத விண்ணப்பித்த மொத்தம் 5,114 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

Advertisement

பெரம்பலூர் நகரில் அமைந்துள்ள டோம்னிக் மேல்நிலைப்பள்ளியில் 114 நபர்களும்,

துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 300 நபர்களும், மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிகளில் 2600 நபர்களும்,

வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள பாரத மாநில வங்கி அருகிலுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 600 நபர்களும்,

எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 600 நபர்களும்,

குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்புக் கல்லூரியில் 300 நபர்களும், கீழக்கணவாய் அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் 600 நபர்களும் தேர்வு எழுத அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இன்றைய தேர்வுக்கு விண்ணப்பித்த 5,114 நபர்களில் 3,912 நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 1,202 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்விற்காக தேர்வினை 18 முதன்மை கண்கானிப்பாளர்களும், 4 பறக்கும் படையினரும், 4 நடமாடும் குழுவினரும், 18 அறை ஆய்வாளர்களுக்கும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும், தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடும், சிறப்பு பேருந்துகள் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது என அவர் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 17:55:51
Privacy-Data & cookie usage: