பெரம்பலூர் : பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு ரூ.30 இலட்சமும் 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் தொகை ரூ.63.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மீனாட்சி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று (06.07.2015) நடைபெற்றது.

கூட்டத்தில், தனிநபர் இல்ல கழிவறை கட்டும் பணி, மாவட்டத்தில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 2015 – 2016 ஆம் ஆண்டிற்கு 40,667 கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்டமாக உரிய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று கடன் வழங்க புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் மற்றும் சுகாதார காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் இல்லங்களில் கழிவறை கட்டும் பணியினை துவங்குவதற்கு நிதி தேவைப்படுபவர்களுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் அமுதசுரபி கடன் நபர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் – வீதம் மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சமும்,

35 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் ரூ.63.25 இலட்சமும் சேர்த்து ரூ.93.25 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!