மனித தன்மையற்ற செயல்: பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பல் 6 பேர் கைது

schedule
2015-07-06 | 11:27h
update
2026-06-16 | 10:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


திருவண்ணாமலை திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தைக்கு 5 இளைஞர்கள் சேர்ந்து மது கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். இந்த காட்சி வாட்ஸ்ப் மற்றும் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித தன்மையற்ற இந்த செயல் குறித்து விசாரணை செய்ய 3 தனிப்படைகள் அமைத்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மதுக்கடைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் ஜெயலலிதா, மதுக்கடையை அரசே நடத்துவதாக அறிவித்தார்.

Advertisement

தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான். தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள்.

இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இப்படி ஒரு கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும் அடுத்த கொடுமை தமிழகத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. குழந்தை மதுகுடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றியுள்ளனர்.

நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள்.

குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.

இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

மனித தன்மையற்ற இந்த செயல் குறித்து விசாரணை செய்ய 3 தனிப்படைகள் அமைத்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

அந்த இளைஞர்களை பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி தற்போது விசாரனை வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 10:17:45
Privacy-Data & cookie usage: