Maruthupandiyar Memorial Day: Participation in all party personalities

ராமநாதபுரம் மாவடடம் வாலாந்தரவை கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 216வது நினைவு நாள் மற்றும் 3ம் ஆண்டு ரத்ததான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் புஜைகள் நடந்தன.

ராமநாதபுரம் அடுத்த வாலாந்தரவை கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் கள் 216வது நினைவு தினத்தை முன்னிட்டு் 3ம் ஆண்டு ரத்ததான முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

நினைவு தினத்தை முன்னிட்டு முன்னதாக காலை 9 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு புஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாமன்னர் மருது சகாதோரர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு புஜைகள் நடந்தன.

மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்தம் சேகரிப்பு குழுவினர் வாலாந்தரவையில் ரத்ததான முகாம் நடத்தினர்.

இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் தானாக முன்வந்து மாமன்னர் மருது பாண்டியர் நினைவு முன்னிட்டு ரத்ததானம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து நடந்த மதுரை வாசன் கண் மருத்துவமனை மற்றும் வாலாந்தரவை இளைஞர் பேரவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிகள் ஊர்த்தலைவர் விசுவநாதன் தலைமையில் நடந்தது. மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை நிறுவனர் மற்றும் பொறுப்பாளர் தர்மா முன்னிலை வகித்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமுர்த்தி, திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் இன்பா ரகு, ஒன்றிய செயலாளர் கணகு, அதிமுக பிரமுக ஸ்டாலின் ஜெயசந்திரன், பி.டி.செல்வம், மேகநாதன், செல்லம், நாகராஜ், ராஜேந்திரன், காந்தி, முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம், ஜோதி, குமார், முனியசாமி, புல்லாணி, வி.ஏ.ஓ.மகேஷ், இளைஞரணி செயலாளர் பிரவீன் உட்பட பலர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை வாலாந்தரவை கிராம பொது மக்கள், மருதுபாண்டியர் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்து அனைத்து கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்று மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!